Wednesday, 31 December 2008

புத்தாண்டு பிறக்கின்றது

வரும் நாட்கள் வளமுடன் இருக்க..
வசந்தமாக அமைய..
விழித்துக் கொண்டே கனவு காண்கிறோம்..
கனவுகள் மெய்பட..
இறையை வேண்டுவோம்..
புத்துணர்வோடு கொண்டாடுவோம்!!!

பிறக்கும் இந்த புதிய ஆண்டுடன் - எம்மில்
மாற்றங்களும் பல பிறக்கட்டும்!!!
மனித நேயம் தழைக்கட்டும் - மாந்தர்
மனம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!!!

இனியும் எம்மக்களின் குருதி
எம் தாயின் மேல் விழ வேண்டாம்!
வறுமையின் கோரத்தால் வரும்
கண்ணீரை எம்தாய்மண் காண வேண்டாம்!

மாதம் மும்மாரி பொழிய வேண்டும்...
தரணியில் பயிர்கள் செழிக்க வேண்டும் ..
எம் மக்கள் கண்ணீரிலும் தண்ணீரிலும்
மிதக்காமல் இருக்க வேண்டும் !!!

நமக்குள் அன்பு பரவட்டும்...
நேசம் நிலைக்கட்டும்!!!
நட்"பூக்கள்" மலரட்டும்..
நன்மைகள் பிறக்கட்டும்!!!

நன்றி
அஜீஜ்